Archive for the ‘வித்யாஷாகர்’ Category

படம் : ஜி
பாடல் : டிங்க் டாங்க்
இசை : வித்யாஷாகர்
பாடலாசிரியர்: பா.விஜய்
பாடியவர்கள் : சதனா ஷர்கம், மது பாலகிருஷ்ணன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

டிங்க் டாங்க் கோவில் மணி… கோவில் மணி நான் கேட்டேன்

உன் பெயர் என் பெயரில் சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்

நீ கேட்டது ஆசையின் எதிரொலி ………

ஆ… நீ தந்தது காதலில் உயிர் வலி

டிங்க் டாங்க் கோவில் மணி… கோவில் மணி நான் கேட்டேன்

உன் பெயர் என் பெயரில் சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்

சொல்லாத காதல் சொல்லும் ….சொல்லாகி வந்தேன்
நீ பேச …என நீ பேச

சொல் ஏது… இனி நான் பேச..

கனவுகளே கனவுகளே பகல் இரவு நிகழ்கிறதே..

ஆ……இதயத்திலே உன் நினைவு இரவு பகல் ஆள்கிறதே

சற்று முன்பு நிலவரம் எந்தன் நெஞ்சில் ..கலவரம்… கலவரம்

ஆ… டிங்க் டாங்க் கோவில் மணி… கோவில் மணி நான் கேட்டேன்

உன் பெயர் என் பெயரில் சேர்ந்து போல் ஒலி கேட்டேன்

புல் தூங்கும்.. பூவும் தூங்கும்…புது காற்றும் தூங்கும்
தூங்காதே நாம் கண்கள் தான்…

ஏங்காதே இது காதல் தான்..

பிடித்த நிலா பிடிக்கவில்லை பிடிக்கிறது உன் முகம் தான்….

இனிக்கும் இசை இனிக்கவில்லை இனிக்கிறது உன் பெயர் தான்…

எழுதி வைத்த சித்திரம் என் நெஞ்சில் பத்திரம்… பத்திரம்

ஆ…டிங்க் டாங்க் கோவில் மணி… கோவில் மணி நான் கேட்டேன்

உன் பெயர் என் பெயரில் சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்

நீ கேட்டது ஆசையின் எதிரொலி ………

ஆ… நீ தந்தது காதலில் உயிர் வலி

=====
Advertisements

படம் : ஜெயம் கொண்டான்
பாடல் : நான் வரைந்து
இசை : வித்யாஷாகர்
பாடலாசிரியர்: பா.விஜய்
பாடியவர்கள் : திப்பு
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே
நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே
நான் துரத்தி நின்ற காக்கைகள் மயில்கள் ஆனதே
என் தலை நனைத்த மழைதுளி அமுதம் ஆனதே
நான் இழுத்து விட்ட மூச்சிலே இசைக்கசிநதே

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே ஒளிருகின்றதே
நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே மலருகின்றதே

===

ஜன்னல் கம்பி உந்தன் கைகள் பட்டு பட்டு
வெள்ளி கம்பி என்று ஆகியதே

கம்பன் சக்கை உந்தன் கண்கள் தொட்டு தொட்டு
தங்க சிற்பமென்று மாறியதே

ஜன்னல் கம்பி உந்தன் கைகள் பட்டு பட்டு
வெள்ளி கம்பி என்று ஆகியதே

கம்பன் சக்கை உந்தன் கண்கள் தொட்டு தொட்டு
தங்க சிற்பமென்று மாறியதே

பூக்கும் புன்னகையாலே என் தோள்கள் ரெக்கைகள் ஆக
நாக்கு உன் பெயர் கூர என் நாள்கள் சக்கரை ஆக

தலைகீழ் தடுமாற்றம் தந்தாய்
என்னில் என் கால்களில்

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே
நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே

===

பள்ளி செல்லவில்லை பாடம் கேட்க வில்லை
அள்ளிக் கொள்ள மட்டும் நான் படித்தேன்

நல்ல முல்லை இல்லை நானும் கயல் இல்லை
உன்னை மட்டும் இங்கு நான் தொடுத்தேன்

பள்ளி செல்லவில்லை பாடம் கேட்க வில்லை
அள்ளிக் கொள்ள மட்டும் நான் படித்தேன்

நல்ல முல்லை இல்லை நானும் கயல் இல்லை
உன்னை மட்டும் இங்கு நான் தொடுத்தேன்

ஊஞ்சல் கயிரு இல்லாமால் என் ஊமை மனது ஆடும்
தூங்க இடம் இல்லாமால் என் காதல் கனவை நாடும்

நொடியும் விலகாமல் கொஞ்சும்
கொஞ்ச தங்கும் நெஞ்சே

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே
நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே
நான் துரத்தி நின்ற காக்கைகள் மயில்கள் ஆனதே
என் தலை நனைத்த மழைதுளி அமுதம் ஆனதே
நான் இழுத்து விட்ட மூச்சிலே இசைக்கசிநதே

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே
நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே

=====

படம் : கில்லி
பாடல் : அப்புடி போடு
இசை : வித்யாஷாகர்
பாடலாசிரியர்: பா.விஜய்
பாடியவர்கள் : அனுராதா ஸ்ரீராம், கே கே
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஹோய்,
அப்புடி போடு போடு போடு
அசத்தி போடு கண்ணாலே
இப்புடி போடு போடு போடு
இழுத்து போடு கையாலே

ஒன்னோட ஊரு சுத்த உப்பு மூட்ட ஏறிக்கிறேன்
ஒன்னோட கண்ண பொத்தி கண்ணாமூச்சி ஆட வாரேன்
இந்த நடை போதுமா?
இன்னும் கொஞ்சம் வேணுமா?
இந்த நடை போதுமா?
இன்னும் கொஞ்சம் வேணுமா?
ஏ இந்த நடை போதுமா?
இன்னும் கொஞ்சம் வேணுமா?

அப்புடி போடு போடு போடு
அசத்தி போடு கண்ணாலே
இப்புடி போடு போடு போடு
இழுத்து போடு கையாலே


என் மனசில நீ நினைக்கறயே
ஏ அழகா என் கனவில நீ முழிக்கிறயே
ஏ அடடா என் உதட்டுல நீ இனிக்கிறயே
இது நிஜம்தானா?

என் உசுருல நீ துடிக்கிறயே,
ஏ அழகி என் வயசுல நீ படுத்திரயே
ஏ மெதுவா என் கழுதுல நீ மனக்கிறயே
இது அதுதானா?

உன்னை பாத்த சந்தோசத்தில் ரெண்டு மடங்க பூத்திருந்தேன்
உன்னை தொட்ட அச்சத்தில மூணு தொடர வேர்திருந்தேன்,

ஒன்னோட கன்னங்களை காகா கடி நான் கடிக்க
என்னோட காது பக்கம் செல்ல கடி நீ கடிக்க
இந்த வயசு போதுமா?
இன்னும் கொஞ்சம் வேணுமா?
இந்த வயசு போதுமா?
இன்னும் கொஞ்சம் வேணுமா?
இந்த வயசு போதுமா?
இன்னும் கொஞ்சம் வேணுமா?

அப்புடி போடு போடு போடு
அசத்தி போடு கண்ணாலே
இப்புடி போடு போடு போடு
இழுத்து போடு கையாலே

திக்க வெக்கிர திணற வெக்கிரயே
நீ மெதுவா விக்க வெக்கிர வியர்க்க வெக்கிரயே
நீ என்னதான் வத்த வெக்கிர வதங்க வெக்கிரயே
இது சரிதானா?

சிக்க வெக்கிர, செவக்க வெக்கிர
நீ ஜோரா சொக்க வெக்கிர சுழல வெக்கிரயே
நீ அழக பத்த வெக்கிர பதற வெக்கிரயே
இது முறைதானா?

ஒத்த பார்வை நெஞ்சுகுள்ளே
ஊசி நூலும் கோர்க்குதடி
தெத்து பல்லு சிரிப்பில் எல்லாம்
பத்து நிலவு தெரிக்குதடி

தை தை-னு ஆடிக்கிட்டு
ஒன்னோடு நானும் வாறேன்
நை நை-னு பேசிகிட்டு
ஒன் கூட சேர்ந்து வாறேன்
இந்த ஆட்டம் போதுமா?
இன்னம் கொஞ்சம் வேணுமா?
இந்த ஆட்டம் போதுமா?
இன்னம் கொஞ்சம் வேணுமா?
ஏ இந்த ஆட்டம் போதுமா?
இன்னம் கொஞ்சம் வேணுமா?

அப்புடி போடு போடு போடு
அசத்தி போடு கண்ணாலே
இப்புடி போடு போடு போடு
இழுத்து போடு கையாலே

ஒன்னோட ஊரு சுத்த உப்பு மூட்ட ஏறிக்கிறேன்
ஒன்னோட கண்ண பொத்தி கண்ணாமூச்சி ஆட வாரேன்
இந்த நடை போதுமா?
இன்னும் கொஞ்சம் வேணுமா?
இந்த நடை போதுமா?
இன்னும் கொஞ்சம் வேணுமா?
ஏ இந்த நடை போதுமா?
இன்னும் கொஞ்சம் வேணுமா?

=====

படம் : எம்டன் மகன்
பாடல் : உன்னோடு தான்
இசை : வித்யாஷாகர்
பாடலாசிரியர்: பாஸ்கர் சக்தி
பாடியவர்கள் : சுபிக் ஷா, திப்பு
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

உன்னோடு தான் இனி உன்னோடு தான்
என் வாழ்கை அது உன்னோடு தான்

இன்று விடியும் புதிய வானம்
காற்று வெளியில் நமது கானம்

மலையில் பிறந்து
கடலில் கலக்கும்
நதிகளை போல நாம்

உன்னோடு தான் இனி உன்னோடு தான்
என் வாழ்கை அது உன்னோடு தான்

தேகம் சிறகா
மயிலின் இறகா
மூடிய உன்னில்
இத்தனை அழகா

ஆசை சுகமா
அனுபவம் சுகமா
கூடிய பொழுதின்
நினைவே சுகமா

மோகத்தீயில் யாவும் வேகும்

நீயும் தீண்ட மூழும் யாகம்

வேள்வியில் தீக்குளிபோம்

மீண்டுமே நாம் பிறப்போம்

=====

படம் : தூள்
பாடல் : ஆசை ஆசை
இசை : வித்யாஷாகர்
பாடலாசிரியர்: கபிலன்
பாடியவர்கள் : சுஜாதா, ஷங்கர் மஹாதேவன்

ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம் இப்பொழுது

கண்ணால் உன்னால் இப்பொழுது காயங்கள் இப்பொழுது
காயம் தீரும் காலம் எப்பொழுது

மலையாய் எழுந்தேன் நான் இப்பொழுது
மணலாய் விரிந்தேன் நான் இப்பொழுது
சுவடை பதிப்பாய் நீ?எப்பொழுது

ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம் இப்பொழுது

தலை முதல் கால்வரை இப்பொழுது நீ?
தவறுகள் செய்வது எப்பொழுது

ஓ?..இடைவெளி குறைந்தது இப்பொழுது உன்?
இதழ்களை துவைப்பது எப்பொழுது

அருகம்புல் ஆகிறேன் இப்பொழுது அதை
ஆடுதான் மேய்வது எப்பொழுது

திருவிழா ஆகிறேன் இப்பொழுது நீ?
எனக்குள் தொலைவது எப்பொழுது

ஆசை ?.ஆசை?ஆசை?.ஆசை? ஆசை?..
ஆசை?ஆசை?.ஆசை..

பூல்வெளி ஆகினேன் இப்பொழுது நீ?
பனித்துளி ஆவது எப்பொழுது

ஓ..கொட்டும் மழை நான் இப்பொழுது உன்?
குடிநீராவது எப்பொழுது

கிணற்றில் சூரியன் இப்பொழுது உன்?
கிழக்கில் உதிப்பது எப்பொழுது

புடவை கருவில் இப்பொழுது நீ?
புதிதாய் பிறப்பது எப்பொழுது

ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம் இப்பொழுது

கண்ணால் உன்னால் இப்பொழுது காயங்கள் இப்பொழுது
காயம் தீரும் காலம் எப்பொழுது
மலையாய் எழுந்தேன் நான் இப்பொழுது

மணலாய் விரிந்தேன் நான் இப்பொழுது
சுவடை பதிப்பாய் நீ?எப்பொழுது

=====

படம் : தில்
பாடல் : உன் சமையல்
இசை : வித்யாஷாகர்
பாடலாசிரியர்: கபிலன்
பாடியவர்கள் : ஹரிஷ் ராகவேந்திரா, ஹரணி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

உன் சமையல் அறையில்,
நான் உப்பா சக்கரையா?

நீ படிக்கும் அறையில்,
நான் கண்களா புத்தங்களா?

உன் சமையல் அறையில்,
நான் உப்பா சக்கரையா?

நீ படிக்கும் அறையில்,
நான் கண்களா புத்தங்களா?

நீ விரல்கள் என்றால்,
நான் நகமா மோதிரமா?

ஆ, நீ இதழ்கள் என்றால்,
நான் முத்தமா புன்னகையா?

ஆ, நீ அழகு என்றால்,
நான் கவியா ஓவியனா?

உன் சமையல் அறையில்,
நான் உப்பா சக்கரையா?

நீ படிக்கும் அறையில்,
நான் கண்களா புத்தங்களா?

நான் வெட்கம் என்றால்,
நீ சிவப்பா கன்னங்களா?

நான் தீண்டல் என்றால்,
நீ விரலா ஸ்பரிசங்களா?

ஆ, நீ குழந்தை என்றால்,
நான் தொட்டிலா தாலாட்டா?

நீ தூக்கம் என்றால்,
நான் மடியா தலையணையா?

ஆ, நான் இதயம் என்றால்,
நீ உயிரா துடிதுடிப்பா?,

உன் சமையல் அறையில்,
நான் உப்பா சக்கரையா?

நீ படிக்கும் அறையில்,
நான் கண்களா புத்தங்களா?
—-
நீ விதைகள் என்றால்,
நான் வேரா விளைநிலமா?

ஆ, நீ விருந்து என்றால்,
நான் பசியா ருசியா?

நீ கைதி என்றால்,
நான் சிறையா தண்டணையா?

நீ மொழிகள் என்றால்,
நான் தமிழா ஓசைகளா?

நீ புதுமை என்றால்,
நான் பாரதியா? பாரதிதாசனா?
நீ…

நீ தனிமை என்றால்,
நான் துணையா தூரத்திலா?

நீ துணைதான் என்றால்,
நான் பேசவா யோசிக்கவா?

நீ திரும்பி நின்றால்,
நான் நிற்கவா போய்விடவா?

நீ போகிறாய் என்றால்,
நான் அழைக்கவா அழுதிடவா?

நீ காதல் என்றால்,
நான் சரியா தவறா?

உன் வலதுகையில் பத்து விரல், (பத்து விரல்)
என் இடதுகையில் பத்து விரல், (பத்து விரல்)
தூரத்து மேகம்,
தூரல்கள் சிந்த,
தீர்த்த மழையில்,
தீ குளிப்போம்…

=====

படம் : கோயம்புத்தூர் மாப்பிள்ளை
பாடல் : ஒரு சேதி
இசை : வித்யாஷாகர்
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : சதனா ஷர்கம், ஹரிஹரன்

ஒரு தேதி பார்த்தால் தென்றல் வீசும்
ஒரு கேள்வி கேட்டால் முல்லைபேச்சும்

உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும்
உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்

முதல், முதல், தொடும் போது
மடல் விடும் உயிர் காதல்
வா வா, எந்தன் வாழ்வே

ஒரு தேதி பார்த்தால் தென்றல் வீசும்
ஒரு கேள்வி கேட்டால் முல்லைபேச்சும்

உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும்
உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்

பார்வை மீது உந்தன் பேர் அழகி
மனபாடம் செய்யும் இந்த பூங்குருவி

நேரில் ஆடி வரும் தேன் அருவி
இதில் நீந்த வேண்டும் இந்த ஆண் குருவி

கோடையிலும் இதழ் காய்வதிலை
ஆசையில் அலை தான் ஒய்வதில்லை

காதல் கதை என்றும் தோற்றதில்லை
தேவனின் விதியில் மாற்றம் இல்லை

நாள் முழுதும் உந்தன் நியாபகம் தான்
எதிர்பார்த்திருக்கும் இந்த பூ முகம் தான்

ஒரு தேதி பார்த்தால் தென்றல் வீசும்
ஒரு கேள்வி கேட்டால் முல்லை பேச்சும்

உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும்
உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்

போடவேண்டும் ஒரு பூ விலங்கை
இசை பாடவேண்டும் உந்தன் காற்சலங்கை

ஏற்றவேண்டும் சின்ன பூத்திரியை
அதில் பார்க்கவேண்டும் முதல் ராத்திரியை

தாமரையே சிறு வான்பிறையே,
மார்ப்பினில் வழியும் தேன்மழையே

காதலனே, இசை பாடகனே
கீதங்கள் பொழியும் பாவலனே

நீ இல்லையே, இங்கு நான் இல்லையே
குளிர் நீர் இல்லையே, துள்ளும் மீன் இல்லையே

ஒரு தேதி பார்த்தால் தென்றல் வீசும்
ஒரு கேள்வி கேட்டால் முல்லை பேச்சும்

உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும்
உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்

முதல், முதல், தொடும் போது
மடல் விடும் உயிர் காதல்
வா வா, எந்தன் வாழ்வே

ஒரு தேதி பார்த்தால் தென்றல் வீசும்
ஒரு கேள்வி கேட்டால் முல்லைபேச்சும்

உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும்
உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்

=====

படம் : சதுரங்கம்
பாடல் : எங்கே எங்கே
இசை : வித்யாஷாகர்
பாடலாசிரியர்: யுகபாரதி
பாடியவர்கள் : கார்த்திக், டிம்மி

எங்கே எங்கே எங்கே என் வென்னிலவு
இங்கே இங்கே இங்கே ஏன் தொந்தரவு

எங்கே எங்கே எங்கே என் வென்னிலவு
இங்கே இங்கே இங்கே ஏன் தொந்தரவு
வீசும் தென்றல் உண்டு என்னை தீண்டவில்லை
வானவில்லும் உண்டு ஏனோ வண்ணம் இல்லை
எண்ணம் இங்கு உண்டு சொல்ல வார்த்தை இல்லை

ஏன் இந்த துன்பம் உன்னை காணவில்லை

எங்கே எங்கே எங்கே என் வென்னிலவு
இங்கே இங்கே இங்கே ஏன் தொந்தரவு

நீயா இன்பம் நீயே இன்பம்
நீயில்லாமல் எதுவும் துன்பம்
காதல் நம்மை சேதம் செய்தால்
யாரை நோவது
நீயா உண்மை நீயே உண்மை
நீயில்லாத உலகம் பொம்மை
காலம் நம்மை நோக செய்தால்
போதும் வாழ்வது
உதிராத ஞாபகம் ஒரு கோடி நீ தர
வரவான வேதனை செலவாகும் நீ வர
நான் மெல்ல நினைத்தேன் சொல்ல அழைத்தேன்
எங்கு தொலைத்தேன்

எங்கே எங்கே எங்கே என் வென்னிலவு
இங்கே இங்கே இங்கே ஏன் தொந்தரவு

காலை தந்தாய் மாலை தந்தாய்
காதல் பேசும் பொழுதும் தந்தாய்
வானம் தந்தாய் நீலம் தந்தாய்
யாவும் நீயடி
தூரல் தந்தாய் தூக்கம் தந்தாய்
தூர்ந்திடாத ஏக்கம் தந்தாய்
வாசம் தந்தாய் வாழ்வும் தந்தாய்
சுவாசம் நீயடி
அழகான பூமுகம் அகலாது காதலி
அணையாது கார்த்திகை துணையாகும் மார்கழி
நான் மெல்ல நினைத்தேன் சொல்ல அழைந்தேன்
எங்கு தொலைத்தேன்

எங்கே எங்கே எங்கே என் வென்னிலவு
இங்கே இங்கே இங்கே ஏன் தொந்தரவு
வீசும் தென்றல் உண்டு என்னை தீண்டவில்லை
வானவில்லும் உண்டு ஏனோ வண்ணம் இல்லை
எண்ணம் இங்கு உண்டு சொல்ல வார்த்தை இல்லை

ஏன் இந்த துன்பம்

=====

படம் : சந்திரமுகி
பாடல் : கொஞ்ச நேரம்
இசை : வித்யாஷாகர்
பாடலாசிரியர்: யுகபாரதி
பாடியவர்கள் : KJ.யேசுதாஸ், ஆஷா போஸ்லே

கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சி பேச கூடாதா
அந்த நேரம் அந்தி நேரம் அன்பு தூரல் போடாதா

கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சி பேச கூடாதா
அந்த நேரம் அந்தி நேரம் அன்பு தூரல் போடாதா

கொஞ்சும் நேரம் கொஞ்சும் நேரம் எல்லை மீற கூடாதா
இந்த நேரம் இன்ப நேரம் இன்னும் கொஞ்சம் நீளாதா…..

கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சி பேச கூடாத
அந்த நேரம் அந்தி நேரம் அன்பு தூரல் போடாதா

கண்ணில் ஓர் அழகு கையில் நூறு அழகு உன்னால் பூமி அழகே

உன்னில் நான் அழகு என்னில் நீ அழகு நம்மால் யாவும் அழகே

ஒ ஒ….கண்ணதாசன் பாடல் வரி போல கொண்ட காதல் வாழும் விழியாக
கம்பன் பாடிபோன தமில் போல எந்தனாளும் தேகம் நலமாக

வழி நீயாக….வயல் நானாக….வெல்லமை நீ
ஹா ஆ ஆ

கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சி பேச கூடாதா
அந்த நேரம் அந்தி நேரம் அன்பு தூரல் போடாதா

கொக்கி போடும் விழி கொத்தி போகும் இதழ் நித்தம் கோலம் இடுமா

மக்கள் யாவரையும் அன்பில் ஆளுகிற, உன்னை போல வருமா

வெளி வேசம் போட தெரியாமல் என்னதாசை கூடதடுமாறும்

ம் ஹும் …பல கோடி பேரின் அபிமானம் உன்னகாக ஏங்கும் எதிர்காலம்

நீ என்னோடு நான் உன்னோடு…மெய் தானே…. இது
ஹா ஆ

கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சி பேச கூடாதா
அந்த நேரம் அந்தி நேரம் அன்பு தூரல் போடாதா

கொஞ்சும் நேரம் கொஞ்சும் நேரம் எல்லை மீற கூடாதா
இந்த நேரம் இன்ப நேரம் இன்னும் கொஞ்சம் நீளாதா..

=====

படம் : சந்திரமுகி
பாடல் : அத்திந்தோம்
இசை : வித்யாஷாகர்
பாடலாசிரியர்: பா.விஜய்
பாடியவர்கள் : SP பால சுப்ரமணியம், வைஷாலி

அத்திந்தோம்….. திந்தியும் தோந்தன….. திந்தாதி நொம்தோம்…….
தகதிதோம்…..திந்தியும் தோந்தன….. திந்தாதி தொம்தோம்…….

அத்திந்தோம் திந்தியும் தோந்தன திந்தாதி நொம்தோம்
தகதிதோம் திந்தியும் தோந்தன திந்தாதி நொம்தோம்

ஆடாதா சவ்வாது மலை ஆடிடும் பொம்மி
ஆண்டவன தாலாட்டும் இசை கேளடி பொம்மி
என் பாட்டு வந்தாலே மனம் துள்ளிடும் பொம்மி
அவன் பாட்டு இல்லாத இடம் எங்கடி பொம்மி
முக்கண்ணு முத்தாக தந்த பாட்டு படிச்சேன்
பாட்டாலே பலகோடி நெஞ்சை நானும் புடிச்சேன்

அத்திந்தோம் திந்தியும் தோந்தன திந்தாதி நொம்தோம்
தகதிதோம் திந்தியும் தோந்தன திந்தாதி நொம்தோம்
திந்தாதி நொம்தோம்…..திந்தாதி நொம்தோம்

ஹே பொம்மி ஹே பொம்மி

வட்ட வட்ட மோட்டுகளை
தட்ட தட்ட வந்ததம்மா நதி காத்து …..ஒ…….நதி காத்து
மொட்டு மொட்டு மெல்ல மெல்ல
மெட்டு மெட்டு தட்டுதம்மா ஸ்ருதி பார்த்து ஸ்ருதி பார்த்து
ஹே…..
ஆட வைக்கணும் பாட்டு
சும்மா அசைய வைக்கணும் பாட்டு

கேட்க வைக்கணும் பாட்டு
நல்ல கிறங்க வைக்கணும் பாட்டு
இந்த பாட்டு சத்தம்
கேட்டு சுற்றும் பூமி எப்போதும்….ம்

அத்திந்தோம் திந்தியும் தோந்தன திந்தாதி நொம்தோம்
தகதிதோம் திந்தியும் தோந்தன திந்தாதி நொம்தோம்

சின்ன சின்ன தொட்டில் கட்டி
அம்மா சொல்லும் ஆரிராரோ இசை தானே…..ஒ….. இசை தானே
ஆணும் பெண்ணும் கட்டில் கட்டி
ஆசை மெட்டு கட்டுறதும் …..இசை தானே..ஒ….. இசை தானே
ஹே……..ஆறு மனமே ஆறு …….
இங்கு அனைத்தும் அறிந்தது யாரு

அறிவை திறந்து பாரு
அதில் இல்லாததை சேரு
எல்லாம் தெரிஞ்ச எல்லாம்
அறிஞ்ச ஆளே இல்லையம்மா

அத்திந்தோம் திந்தியும் தோந்தன திந்தாதி நொம்தோம்
தகதிதோம் திந்தியும் தோந்தன திந்தாதி நொம்தோம்

ஆடாதா சவ்வாது மலை ஆடிடும் பொம்மி
ஆண்டவன தாலாட்டும் இசை கேளடி பொம்மி
என் பாட்டு வந்தாலே மனம் துள்ளிடும் பொம்மி
அவன் பாட்டு இல்லாத இடம் எங்கடி பொம்மி
முக்கண்ணு முத்தாக தந்த பாட்டு படிச்சேன்
பாட்டாலே பலகோடி நெஞ்சை நானும் புடிச்சேன்

அத்திந்தோம் திந்தியும் தோந்தன திந்தாதி நொம்தோம்
தகதிதோம் திந்தியும் தோந்தன திந்தாதி நொம்தோம்

=====