Archive for the ‘தீனா’ Category

படம் : யூத்
பாடல் : சக்கரை நிலவே
இசை : மணி ஷர்மா
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : ஹரிஷ் ராகவேந்திரா
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சக்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே

சக்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே

மனம் பசை தண்ணி தான் பெண்ணே
அதை பற்ற வைத்தது உன் கண்ணே
என் வாழ்கை என்னும் காட்டை எரித்து
குளிர் காய்ந்தாய் கொடுமை பெண்ணே

கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா?

சக்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே

காதல் என்ற ஒன்று அது கடவுள் போல
உணர தானே முடியும் அதில் உருவம் இல்லை
காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல
வாயை மூடி அழுமே சொல்ல வார்தை இல்லை
அன்பே உன் புன்னகை எல்லாம் அடி நெஞ்சில் சேமித்தேன்
கண்ணே உன் பொன்னகை எல்லாம் கண்ணீராய் உருகியதே
வெள்ளை சிரிப்புகள் உன் தவறா?
அதில் கொள்ளை போனது என் தவறா?
பிரிந்து சென்றது உன் தவறா?
நான் புரிந்து கொண்டது என் தவறா?
ஆண் கண்ணீர் பருகும் பெண்ணின் இதயம்
சதையல்ல கல்லின் சுவரா?

கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா?

நவம்பர் மாத மழையில் நான் நனைவேன் என்றேன்
எனக்கும் கூட நனைதல் மிக பிடிக்கும் என்றாய்
மொட்டை மாடி நிலவில் நான் குளிப்பேன் என்றேன்
எனக்கும் அந்த குளியல் மிக பிடிக்கும் என்றாய்
சுகமான குரல் யார் என்றால் சுசீலாவின் குரல் என்றேன்
எனக்கும் அந்த குரலில் ஏதோ மயக்கம் என நீ சொன்னாய்
கண்கள் மூடிய புத்தர் சிலை
என் கனவில் வருவது பிடிக்கும் என்றேன்
தயக்கம் என்பது சிறிதும் இன்றி
அது எனக்கும் எனக்கும் தான் பிடிக்கும் என்றாய்
அடி உனக்கும் எனக்கும் எல்லாம் பிடிக்க
என்னை ஏன் பிடிக்காது என்றாய்?

கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா?

=====

படம் : வின்னர்
பாடல் :
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்: பா.விஜய்
பாடியவர்கள் : ஹரிஷ் ராகவேந்திரா
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது
எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது

எங்கேயோ பிறந்தாய் அடி எங்கேயோ வளர்ந்தாய்
இன்று என் முன்னால் நீயாய் வந்தாய்
இதற்கென்ன அர்த்தம் என் உயிரெல்லாம் சத்தம்
அடி எனக்காக நீயும் வந்தாய்

எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது
எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது

ஓ…நிலவின் பின்புறமாய் நீ தான் இருந்தாயா
குயிலின் குரல்வளையில் ஒளிந்தே இருந்தாயா ஓ…
கடலின் அடியில் படிந்தா இருந்தாய்
மலையின் மடியில் தவழ்ந்தா கிடந்தாய்
இந்த உலகின் அழகெங்கும் நீ தானா வழிந்தோடினாய்

எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது
எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது

இதழை சுளிக்காதே இயங்காமல் போவேன்
இடையை வளைக்கதே இடிந்தே நான் சாய்வேன்
அடியே சிரிக்காதே இன்றே உடைவேன்
ஐயோ நெளியாதே அழுதே விடுவேன்
ஒரு ஊசி முனை வழியே உயிரை நீ வெளியேற்றினாய்

எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது
எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது

எங்கேயோ பிறந்தாய் அடி எங்கேயோ வளர்ந்தாய்
இன்று என் முன்னால் நீயாய் வந்தாய்
இதற்கென்ன அர்த்தம் என் உயிரெல்லாம் சத்தம்
அடி எனக்காக நீயும் வந்தாய்

=====

படம் : வின்னர்
பாடல் : எந்தன் உயிர்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்: பா.விஜய்
பாடியவர்கள் : உதித் நாராயணன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

எந்தன் உயிர் தோழியே
கண் திறந்து பார்த்தாய்
காதலை நான் உணர்ந்தேன்
நெற்றி முடி ஓரத்தில் என் உயிரை இழுத்தாய்
சட்டென்று நான் விழுந்தேன்
ஒரு கண்ணோ என் விழியை கீரியதே
மறு கண்ணோ என் நெஞ்சில் ஊறியதே
ரயில் ஓடும் பாலம் போலே
அன்பே என் மனசுக்குள்ளே காதல் அலறி ஓட

எந்தன் உயிர் தோழியே
கண் திறந்து பார்த்தாய்
காதலை நான் உணர்ந்தேன்
நெற்றி முடி ஓரத்தில் என் உயிரை இழுத்தாய்
சட்டென்று நான் விழுந்தேன்

உன் நெற்றி சுழியில் சிக்கி, உன் கன்ன குழியில் விக்கி நின்றேன்
உன் நிலா கண்ணில் மூழ்கி, உன் காதல் பிரிவில் தங்கி
மூச்சிழந்தேன் அன்பே
உன் கூந்தல் அதை கொண்டு, உன் கொஞ்சும் மொழி கண்டு
நான் இங்கே வாழாமல் மண்ணில் சாய்ந்திடவோ
செவ்விதழில் நுரை அள்ளி ஒரு பாதம் வரை கிள்ளி
உன்னோடு ஒன்றாமல் இங்கே ஓய்ந்திடவோ

எந்தன் உயிர் தோழியே
கண் திறந்து பார்த்தாய்
காதலை நான் உணர்ந்தேன்
நெற்றி முடி ஓரத்தில் என் உயிரை இழுத்தாய்
சட்டென்று நான் விழுந்தேன்

எந்தன் உயிர் தோழியே
கண் திறந்து பார்த்தாய்
காதலை நான் உணர்ந்தேன்
நெற்றி முடி ஓரத்தில் என் உயிரை இழுத்தாய்
சட்டென்று நான் விழுந்தேன்
ஒரு கண்ணோ என் விழியை கீரியதே
மறு கண்ணோ என் நெஞ்சில் ஊறியதே
ரயில் ஓடும் பாலம் போலே
அன்பே என் மனசுக்குள்ளே காதல் அலறி ஓட

=====

படம் : விரும்புகிறேன்
பாடல் : விரும்புகிறேன்
இசை : தேவா
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : உன்னி மேனன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கடைகண் பார்வை தன்னை கன்னியர் தம்
காட்டிவிட்டால்
மண்ணில் குமரருக்கு மாமலையும் ஒர் கடுகாம்

ஒத்த பார்வை பாத்த உடம்பில சக்தி ஏறுது ஆத்தா
(தொடு தொடு ஹாயோ தொடு தொடு)
பார்வை பட்ட இடத்தில் புதுசா ரத்தம் ஊறுது ஆத்தா
(தொடு தொடு ஹாயோ தொடு தொடு)
முன்னாலே வந்தாயே கண்ணாலே ஜெயிச்சிபுட்டேன்
மின்னலாய் போனாயே இதயத்தை தொலைச்சி புட்டேன்
(தொடு தொடு ஹாயோ தொடு தொடு)
(தொடு தொடு ஹாயோ தொடு தொடு)

வா வா என்று நான் கேட போதும்
வந்தேன் என்று நீ தாவவில்லை
வானம் தாண்ட சிறகுள்ள போதும்
நாணம் தாண்டி வெளியேரவில்லை
ஆகாயினாலடி (விரும்புகிறேன்)
(தொடு தொடு ஹாயோ தொடு தொடு)

அரும்பு மலரும் வசந்த காலம்
ஆசை மலரும் கார்காலம்
அன்பு மலரும் ஆறு காலம்
ஒரு கண்ணில் இரு கண்ணில்
உலவ கண்டதால் (விரும்புகிறேன்)
(தொடு தொடு ஹாயோ தொடு தொடு)

(முன்னாலே வந்தாயே கண்ணாலே ஜெயிச்சிபுட்டேன்
மின்னலாய் போனாயே இதயத்தை தொலைச்சி புட்டேன்)

அசர வைக்கும் உசரமும் நீயில்லை
அதிர்ச்சி தரும் குள்ளமும் நீயில்லை
வசதி பட்ட உசரம் என்பதனால்
அடி ரதியே (விரும்புகிறேன்)
(தொடு தொடு ஹாயோ தொடு தொடு)

இரைகள் வேறு இருவருக்கும்
கூடுகள் வேறு இருவருக்கும்
பறக்கும் திசை மட்டும் ஒன்றாய்
இருப்பதனாலே…(விரும்புகிறேன்)
(தொடு தொடு ஹாயோ தொடு தொடு)

(முன்னாலே வந்தாயே கண்ணாலே ஜெயிச்சிபுட்டேன்
மின்னலாய் போனாயே இதயத்தை தொலைச்சி புட்டேன்)

பெண்களை கண்டு மனம் துடித்ததில்லையே
காதல் வரும் என்று நினைத்த தில்லையே
உன்னை கண்டதும் என் கருத்து மாறியதால் (விரும்புகிறேன்)
(தொடு தொடு ஹாயோ தொடு தொடு)

நகர்தின…

(விரும்புகிறேன்)
(தொடு தொடு ஹாயோ தொடு தொடு)

ஒத்த பார்வை பாத்த உடம்பில சக்தி ஏறுது ஆத்தா
(தொடு தொடு ஹாயோ தொடு தொடு)
பார்வை பட்ட இடத்தில் புதுசா ரத்தம் ஊறுது ஆத்தா
(தொடு தொடு ஹாயோ தொடு தொடு)
முன்னாலே வந்தாயே கண்ணாலே ஜெயிச்சிபுட்டேன்
மின்னலாய் போனாயே இதயத்தை தொலைச்சி புட்டேன்
(தொடு தொடு ஹாயோ தொடு தொடு)
(தொடு தொடு ஹாயோ தொடு தொடு)

(தொடு தொடு ஹாயோ தொடு தொடு)
(தொடு தொடு ஹாயோ தொடு தொடு)

=====

படம் : விருமாண்டி
பாடல் : உன்னை விட
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: கமலஹாசன்
பாடியவர்கள் : கமலஹாசன், ஷ்ரேயா கௌஷல்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்லை
உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்லை

உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிகொள்ள யாருமில்லை யாருமில்லை

வாக்கபட கிடைச்சான் விருமாண்டி
சாட்சி சொல்ல சந்திரன் வருவாண்டி
சாதி சனம் எல்லாம் அவன் தான்டி
கேட்ட வரம் உடனே தந்தான்டி
என்னை விட உன்னை சரிவர புரிஞ்சிக்க யாருமில்லை எவளுமில்லை

உன்னை விட…..

என்னை விட……..

அல்லி கொடிய காத்து அசைக்குது
அசையும் குளத்துக்கு உடம்பு கூசுது
புல்லரிச்சு பாவம் என்னை போலவே அலை பாயுது

நிலவில் காயும் வேட்டி சேலையும்
நம்மை பார்த்து ஜோடி சேருது
சேர்த்து வைச்ச காத்தே துதி பாடுது சுதி சேருது

என்ன புது தாகம் அனல் ஆகுதே என் தேகம்
யாரு சொல்லி தந்து வந்தது
கானாக்களா வந்து கொல்லுது
இதுக்கு பேரு தான் மோட்சமா மோட்சமா மோட்சமா….

உன்னை விட…
காட்டு வழி காளைங்க கழுத்து மணி
கேட்கையில நமக்கு அது கோயில் மணி
ராத்திரியில் புல் வெளி நனைக்கும் பனி
போத்திக்கிற நமக்கு அது மூடு பனி

உன்னை விட……

உன் கூட நான் கூடி இருந்திட
எனக்கு ஜென்மம் ஒன்னு போதுமா
நூறு ஜென்மம் வேணும் அத கேட்குறேன் சாமியே

(என்ன கேட்குற சாமிய?

நூறு ஜென்மம் உன் கூட

போதுமா?)
நூறு ஜென்மம் நமக்கு போதுமா
வேற வரம் ஏதும் கேட்போமா?
சாகா வரம் கேட்போம் அந்த சாமிய அந்த சாமிய

காத்தா அலைஞ்சாலும் கடலாக நீ இருந்தாலும்
ஆகாசமா ஆன போதிலும்
என்ன உரு எடுத்த போதிலும் சேர்ந்தே தான் பொறக்கணும்
இருக்கணும் கலக்கணும்

உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்லை

உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிகொள்ள யாருமில்லை எவளுமில்லை
வாழ்கை தர வந்தான் விருமாண்டி
சாட்சி சொல்ல சந்திரன் வருவாண்டி

சாதி சனம் எல்லாம் அவன் தான்டி
கேட்ட வரம் உடனே தந்தான்டி

உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிகொள்ள யாருமில்லை யாருமில்லை

என்னை விட …

உன்னை விட …

=====

படம் : வி.ஐ.பி
பாடல் : மின்னல் ஒரு
இசை : ரஞ்சித் பரோட்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : சித்ரா, ஹரிஹரன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே
ஓ… லட்சம் பல லட்சம்
பூக்கள் ஒன்றாக பூத்ததே
உன் வார்தை தேன் வார்த்ததே
மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே
ஓ… லட்சம் பல லட்சம்
பூக்கள் ஒன்றாக பூத்ததே
உன் வார்தை தேன் வார்த்ததே
மௌனம் பேசியதே
குளிர் தென்றல் வீசியதே
ஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே…
மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே
ஓ…

குளிரும் பனியும் எனை சுடுதே சுடுதே
உடலும் உயிரும் இனி தனியே தனியே
காமன் நிலவே எனை ஆளும் அழகே
உறவே உறவே இன்று சரியோ பிரிவே
நீராகினால் நான் மழையாகினேன்
நீ வாடினால் என் உயிர் தேயிகிறேன்…

ஆயூள் வரை உன் பாயில் உறவாட வருகிறேன்
காதல் வரலாறு எழுத என் தேகம் தருகிறேன்
என் வாழ்க்கை உன் வார்த்தையில்

மழையில் நனையும் பனி மலரை போலே
என் மனதை நனைத்தேன் உன் நினைவில் நானே
உலகை தழுவும் நள்ளிரவை போலே
என் உள்ளே பரவும் ஆருயிரும் நீயே
எனை மீட்டியே நீ இசையாக்கினாய்
உனை ஊற்றியே என் உயிர் ஏற்றினாய்

மின்னல் ஒரு கோடி உந்தன் உயிர் தேடி வந்ததே

ஓ… லட்சம் பல லட்சம்
பூக்கள் ஒன்றாக பூத்ததே

உன் வார்தை தேன் வார்த்ததே

மௌனம் பேசியதே

குளிர் தென்றல் வீசியதே

ஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே…

=====

படம் : விண்ணுக்கும் மண்ணுக்கும்
பாடல் : உன்னக்கென
இசை : சிற்பி
பாடலாசிரியர்: பா.விஜய்
பாடியவர்கள் : சுஜாதா, எஸ்.பி.பாலசுப்ரமணியம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

உன்னக்கென உன்னக்கென
பிறந்தேனே
உயிரென உணர்வெனே
கலந்தேனே

உன்னக்கென உன்னக்கென
பிறந்தேனே
உயிரென உணர்வெனே
கலந்தேனே
இதயத்தை இதயத்தை
இழந்தேனே
இமைகளில் கனவுகள்
சுமந்தேனே

உன்னக்கென உன்னக்கென
பிறந்தேனே
உயிரென உணர்வெனே
கலந்தேனே

திருவிழா போல காதல்தான்
அதில் நீயும் நானும் தொலைவோமா
தினசரி செய்தி தாள்களில்
நம்மை தேடும் செய்தி தருவோமா
ச்ரிராம ஜெயத்தை போல் உனது பேரை
தினம் எழுதி பார்க்கிறேன்,
கிளி ஒன்றை வாங்கி உன் பேரை கூறி
தினம் சொல்ல கேட்கிரேன்
அடி ஒரு கோடி கொலுசில் உன் கொலுசின் ஒசை
உயிர் வரை கேட்கிறதே

உன்னக்கென உன்னக்கென
பிறந்தேனே
உயிரென உணர்வெனே
கலந்தேனே
இதயத்தை இதயத்தை
இழந்தேனே
இமைகளில் கனவுகள்
சுமந்தேனே

கடலாக நீயும் மாறினால்
அதில் முழ்கி முழ்கி அலையாவேன்
நெருப்பாக நீயும் மாறினால்
அதில் சாம்பாலாகும் வரம் கேட்பேன்
அரிதாரம் பூசும் ஒரு வானவில்லை
பரிசாக கேட்கிறேன்
அகல் தீபமாகி ஆகாய நிலவை
உறவோடு பார்க்கிறேன்
அடி பொய் என்றபோது உன்னோடு பேசும்
கனவுகள் வேண்டுகிறேன்

உன்னக்கென உன்னக்கென
பிறந்தேனே
உயிரென உணர்வென
கலந்தேனே
இதயத்தை இதயத்தை
இழந்தேனே
இமைகளில் கனவுகள்
சுமந்தேனே

உன்னக்கென உன்னக்கென
பிறந்தேனே

=====

படம் : வேட்டையாடு விளையாடு
பாடல் : பார்த்த முதல்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர்: தாமரை
பாடியவர்கள் : உன்னி மேனன், பாம்பே ஜெயஸ்ரீ
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பார்த்த முதல் நாளே
உன்னை பார்த்த முதல் நாளே
காட்சி பிழை போலே
உணர்ந்தேன் காட்சி பிழை போலே

ஒரு அலையை வந்து என்னை அடித்தாய்
கடலாய் மாறி பின் என்னை இழுத்தாய்
என் பதாகை தங்கிய உன் முகம் உன் முகம் என்றும் மறையாதே

காட்டி கொடுக்கிறதே கண்ணே காட்டி கொடுக்கிறதே
காதல் வழிகிறதே கண்ணில் காதல் வழிகிறதே
உன் விழியில் வழியும் பிரியங்களை
பார்த்தே கடந்தேன் பகல் இரவை
உன் அலாதி அன்பினில் நனைந்தபின் நனைந்தபின் நானும் மழை யானேன்

காலை எழுந்ததும் என் கண்கள் முதலில் தேடி பிடிப்பது உந்தன் முகமே
தூக்கம் வருகையில் கண் பார்க்கும் கடைசி காட்சிக்குள் நிற்பது உன் முகமே

என்னை பற்றி எனக்கே தெரியாத பலவும் நீ அறிந்து நடப்பது வியப்பேன்
உனை ஏதும் கேட்காமல் உனது ஆசை அனைத்தும் நிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன்

போகின்றேன் என நீ பல நூறு முறைகள் விடை பெற்றும் போகாமல் இருப்பாய்
சரி என்று சரி என்று உனை போக சொல்லி
கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்
கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்

காட்டி கொடுக்கிறதே கண்ணே காட்டி கொடுக்கிறதே
காதல் வழிகிறதே கண்ணில் காதல் வழிகிறதே

ஒரு அலையை வந்து என்னை அடித்தாய்
கடலாய் மாறி பின் என்னை இழுத்தாய்

உன் அலாதி அன்பினில் நனைந்தபின் நனைந்தபின் நானும் மழை யானேன்

உன்னை மறந்து நீ தூக்கத்தில் சிரித்தாய் தூங்காமல் அதை கண்டு ரசித்தேன்
தூக்கம் மறந்து நான் உன்னை பார்க்கும் காட்சி கனவாக வந்தது என்று நினைத்தேன்

யாரும் மானிடரே இல்லாத இடத்தில் சிறு வீடு கட்டி கொள்ள தோன்றும்
நீயும் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை மரம் தோறும் செதுக்கிட வேண்டும்

கண் பார்த்து கதைக்க முடியாமல் நானும் தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீ தான்
கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்த்தும்
சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான்
சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான்

பார்த்த முதல் நாளே
உன்னை பார்த்த முதல் நாளே
காட்சி பிழை போலே
உணர்ந்தேன் காட்சி பிழை போலே

ஒரு அலையை வந்து என்னை அடித்தாய்
கடலாய் மாறி பின் என்னை இழுத்தாய்
என் பதாகை தங்கிய உன் முகம் உன் முகம் என்றும் மறையாதே

=====

படம் : வேட்டையாடு விளையாடு
பாடல் : மஞ்சள் வெயில்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர்: தாமரை
பாடியவர்கள் : விஜய், நகுல்,ஹரிஹரன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வென்னிலவே
வெள்ளி வெள்ளி நிலவே
போகும் இடம் எல்லாமே
கூட கூட வந்தாய்

வென்னிலவே
வெள்ளி வெள்ளி நிலவே
நட்சத்திர பட்டாளம் கூட்டிக்கொண்டு வந்தாய்..

மஞ்சள் வெயில் மாலையிதே
மெல்ல மெல்ல இருளுதே
பளிச்சிடும் விளக்குகள்
பகல் போல் காட்டுதே

தயக்கங்கள் விலகுதே
தவிப்புகள் தொடருதே
அடுத்தது என்ன என்ன
என்றே தான் தேடுதே….

வென்னிலவே
வெள்ளி வெள்ளி நிலவே
போகும் இடம் எல்லாமே
கூட கூட வந்தாய்

வென்னிலவே
வெள்ளி வெள்ளி நிலவே
நட்சத்திர பட்டாளம் கூட்டிகொண்டு வந்தாய்..

உலகத்தின் கடைசி நால்
இன்று தான்…..என்பதுபோல்
பேசி பேசி தீர்த்தபின்னும்
ஏதோ ஒன்று குறையுதே…

உள்ளே ஒரு சின்னசிறு
மரகத மாற்றம் வந்து
குறுகுறு மின்னல் என்ன
குறுக்கே ஓடுதே…

வென்னிலவே
வெள்ளி வெள்ளி நிலவே
போகும் இடம் எல்லாமே
கூட கூட வந்தாய்
வென்னிலவே
வெள்ளி வெள்ளி நிலவே
நட்சத்திர பட்டாளம் கூட்டிக்கொண்டு வந்தாய்..

மஞ்சள் வெயில் மாலையிதே
மெல்ல மெல்ல இருளுதே
பளிச்சிடும் விளக்குகள்
பகல் போல் காட்டுதே

தயக்கங்கள் விலகுதே
தவிப்புகள் தொடருதே
அடுத்தது என்ன என்ன
என்றே தான் தேடுதே…

வண்ணங்கள் வண்ணங்கள் அற்ற
வழியில் வழியில் சிலர்
… நடக்கிறார் நடக்கிறார்
அஹ் ..மஞ்சளும் பச்சையும் கொண்டு
பெய்யுது பெய்யுது மழை
.. நனைகிறார் நனைகிறார்

யாரோ யாரோ யாரோ அவள்
ஹே..யாரோ யாரோ யாரோ அவன்
ஒரு கோடும் கோடும் வெட்டிகொள்ள
இரு தண்டவாளம் ஒட்டி செல்ல…

வென்னிலவே
வெள்ளி வெள்ளி நிலவே
போகும் இடம் எல்லாமே
கூட கூட வந்தாய்
வென்னிலவே
வெள்ளி வெள்ளி நிலவே
நட்சத்திர பட்டாளம் குட்டிகொண்டு வந்தாய்..

இன்னும் கொஞ்சும் நிலவனும்
இந்த நொடி இந்த நொடி
எத்தனையோ காலம் தள்ளி

படம் : வெற்றி விழா
பாடல் : தத்தோம்
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தத்தோம் தளாங்கு தத்தோம்
தொட்டும் தொடாமல் தொட்டோம்
கனியை தாங்கும் கொடியாய் தாங்கும் தகதோம்….

தத்தோம் தளாங்கு தத்தோம்
பட்டும் படாமல் பட்டோம்
மிருதங்கம் தாங்கும் அங்கம் ஏங்கும் தகதோம்…
தழுவட்டும் தழுவட்டும்
இளவட்டம் இளவட்டம்
பரவட்டும் பரவட்டும்
இசை வெள்ளம் பரவட்டும்
இமயத்தின் முடிமட்டும் இளமைதான் கொடி காட்டும் ஹோய்…

தத்தோம் தளாங்கு தத்தோம்
தொட்டும் தொடாமல் தொட்டோம்

தத்தோம் தளாங்கு தத்தோம்
பட்டும் படாமல் பட்டோம்

இரவில் உன்னோடு நர்த்தனம் தான்
இடையில் உண்டாகும் சத்தம்
உறவில் முன்னூறு கீர்த்தனம் தான்
இதழில் கொண்டாடும் முத்தம்

சுதந்திரம் தினம் தினம் தான்
நிரம்தரம் சுகம் சுக ம்தான்
நலம் பெறும் மனம் மனம் தான்
வலம் வரும் நகர்வலம் தான்

இணையத்தான் இணையத்தான்
அணையத்தான் அணையத்தான்

ஒரு அத்தான் ஒரு அத்தான்
உருகத்தான் உருகத்தான்

திசை எட்டும் இசை எட்டும் தாளங்கள் முழங்கட்டும் ஹோய்…

தத்தோம் தளாங்கு தத்தோம்
தொட்டும் தொடாமல் தொட்டோம்
கனியை தாங்கும் கொடியாய் தாங்கும் தகதோம்….

தத்தோம் தளாங்கு தத்தோம்
பட்டும் படாமல் பட்டோம்
மிருதங்கம் தாங்கும் அங்கம் ஏங்கும் தகதோம்…
தழுவட்டும் தழுவட்டும்
இளவட்டம் இளவட்டம்
பரவட்டும் பரவட்டும்
இசை வெள்ளம் பரவட்டும்
இமயத்தின் முடிமட்டும் இளமைதான் கொடி காட்டும் ஹோய்…

தத்தோம் தளாங்கு தத்தோம்
தொட்டும் தொடாமல் தொட்டோம்

தத்தோம் தளாங்கு தத்தோம்
பட்டும் படாமல் பட்டோம்

கழுவும் தண்ணீரில் நழுவிடுமே
வலையில் சிக்காத மீன்கள்
தடைகள் இல்லாமல் தாவிடுமே
தடைகள் கொண்டாடும் மான்கள்

சிறையினில் பறவைகள்தான்
சிறகினை விரித்திடத்தான்
பிறந்தது துணிச்சலுந்தான்
பறந்திடும் இருப்பிடம்தான்

இதயத்தில் துணிவைத்தான்
குடி வைக்கும் குடி வைக்கும்

எதிரிக்கும் உதிரிக்கும்
வெடி வைக்கும் வெடி வைக்கும்

திசை எட்டும் கொடி கட்டும் தாளங்கள் முழங்கட்டும் ஹோய்…

தத்தோம் தளாங்கு தத்தோம்
பட்டும் படாமல் பட்டோம்
மிருதங்கம் தாங்கும் அங்கம் ஏங்கும் தகதோம்…

தத்தோம் தளாங்கு தத்தோம்
தொட்டும் தொடாமல் தொட்டோம்
கனியை தாங்கும் கொடியாய் தாங்கும் தகதோம்….

தழுவட்டும் தழுவட்டும்
இளவட்டம் இளவட்டம்
பரவட்டும் பரவட்டும்
இசை வெள்ளம் பரவட்டும்
இமயத்தின் முடிமட்டும் இளமைதான் கொடி காட்டும் ஹோய்…

தத்தோம் தளாங்கு தத்தோம்
தொட்டும் தொடாமல் தொட்டோம்

தத்தோம் தளாங்கு தத்தோம்
பட்டும் படாமல் பட்டோம்

=====