படம் : சித்திரம் பேசுதடி
பாடல் : ஆகாயம் ஆகாயம்
இசை : சுந்தர் C பாபு
பாடலாசிரியர்: மிக்ஷின்
பாடியவர்கள் : ஹரிஹரன்
ஆகாயம் ஆகாயம் மேகம் பாரமா
உன் வாழ்வில் உன் வாழ்வில் நானே சோகமா
உயிரே என்னை விலகாதே
என் நிழலே என்னை பிரியாதே
உயிரே என்னை விலகாதே
என் நிழலே என்னை பிரியாதே
என் பாடல், என் காதல்
உன்னை என்றும் தேடி வரும் – அந்த
ஆகாயம் ஆகாயம் மேகம் பாரமா
உன் வாழ்வில் உன் வாழ்வில் நானே சோகமா
—
வானவில் வண்ணம்
மழைல் சாயம் போகுமோ
தாயின் முத்தம்
குழந்தைக்கு காயம் ஆகுமோ
பூங்காற்றே பூவை கொல்லாதே
என் அன்பே நெஞ்சை கிள்ளாதே
என் பாடல், என் காதல்
உன்னை என்றும் தேடி வரும் – அந்த
—
ஆகாயம் ஆகாயம் மேகம் பாரமா
உன் வாழ்வில் உன் வாழ்வில் நானே சோகமா
—
நிலவும் ஒளியும்
இன்று பிரிந்து போகுமோ
அலையும் கரையும்
நிலையாய் விலகிபோகுமோ
தென்றலே தள்ளிசெல்லாதே – இதய
கதவினை மூடி கொள்ளாதே
என் பாடல், என் காதல்
உன்னை என்றும் தேடி வரும் – அந்த
—
ஆகாயம் ஆகாயம் மேகம் பாரமா
உன் வாழ்வில் உன் வாழ்வில் நானே சோகமா
உயிரே என்னை விலகாதே
என் நிழலே என்னை பிரியாதே
உயிரே என்னை விலகாதே
என் நிழலே என்னை பிரியாதே
என் பாடல், என் காதல்
உன்னை என்றும் தேடி வரும் – அந்த
ஆகாயம் ஆகாயம் மேகம் பாரமா
உன் வாழ்வில் உன் வாழ்வில் நானே சோகமா
=====