மன்மதன் அம்பு – கண்ணோடு கண்ணை

Posted: July 11, 2011 in Uncategorized

படம் : மன்மதன் அம்பு
இசை : தேவி ஸ்ரி பிரசாத்
பாடியவர்கள் : கமல், திரிஷா
பாடல்: கமல்

கண்ணோடு கண்ணை கலந்தால் என்றால்
கலங்கமுள்ளவள் எச்சரிக்கை
உடனே கையுடன் கை கோர்த்தாள்
ஒழுக்கங்கெட்டவள் எச்சரிக்கை

ம்…

ஆடைகள் கலைகையில் கூடுதல் பேசினால்
அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை
ம்..
கலவி முடிந்தபின் கிடந்து பேசினால்
காதலாய் மாறலாம் எச்சரிக்கை

கவிதை இலக்கியம் பேசினாலாயின்
காசை மதியால் எச்சரிக்கை
உன்னுடன் இருப்பது சுகம் என்றாளா
உறுதியாய் சிக்கல் எச்சரிக்கை

ம் ஹும்

அறுவடை கொள்முதல் என்றே காமம்
அமைவது பொதுவே நலமாக கொள்
கூட்டல் ஒன்றே குறி என்றனாபின்
கழிவது காமம் மட்டும் எனக்கொள்
உன்னை மங்கையர் என்னென கொள்வர்
யோசிக்காமல் வருவருதை எதிர்கொள்
முன்னும் பின்னும் ஆட்டும் சகடை
ஆணும் பெண்ணும் அதுவே எனக்கொள்
காமம் எனப்படும் பண்டை செயலில்
காதல் கலவாது காத்துகொள்
இப்பெண்ணுரைக்கெதிராய் ஆணுரை ஒன்றே
இயற்ற துணியும் அணி சேர்த்துகொள்

ஆஹா
இயற்ற துணியும் அணி சேர்த்துக்கணுமா
ஆஹா..
துணிவே அணியின் துணை என்றானபின்
அணி என்றொன்றெதர்க்கு
தனியே வருவேன்

அப்படி வாங்க வழிக்கு
so நீங்க கவிஞர் தானே

guilty is accussed
அப்போ judgement சொல்றேன்

ஆஹ் சொல்லுங்க

பதிலுக்கு ஒரு கவிதை சொல்லணும்
அதுதான் தண்டனை

யாருக்கு

அது கவிதையை கேட்டதானே தெரியும்

ஹா ஹா ஹா…
அதுவும் சரிதான்
ஆனா நீங்க கோவிச்சுக்கூடாது

ஏன், பெண்களை பத்தி கேலியா?

சே சே
இது ஒரு பெண்ணுடைய வேண்டுதல் மாதிரி
ஒரு பெண்ணு தெய்வத்துகிட்ட பாடுற தோத்திர பாடல்

ஒ நீங்க பக்திமானா?

ஆஹ் அதெல்லாம் இல்லீங்க
நான் புத்திமானங்கிறதே கேள்விகுறியா இருக்கு

கவிதையா கேட்ட
கேள்விகுறி ஆச்சரியா குறிய மாறலாம் இல்லையா

ம் Maybe
May I

please

கலவி செய்கையில் காதில் பேசி
கனிவாய் மெலிதாய் கழுத்தை கவ்வும்
வெள்ளை பளிச்சிடும் பற்கள் வேண்டும் (வேண்டும்)
குழந்தை வாயை நுகர்ந்தது போல
கடும் நாற்றம் இல்லாத வாயும் வேண்டும் (வேண்டும்)
காமக்கழிவுகள் கழுவும் வேளையில்
கூட நின்றவன் உதவிட வேண்டும் (வேண்டும்)
சமையலின் போதும் உதவிட வேண்டும் (வேண்டும்)
சாய்ந்து நெகிழ்ந்திட தின் தோள் வேண்டும் (வேண்டும்)
மோதிக் கோபம் தீர்க்க வசதியாய்
பாறை பதத்தில் நெஞ்சும் வேண்டும் (வேண்டும்)
அதற்கு பின்னால் துடிக்கும் இதயமும்
அது ரத்தம் பாய்ச்சி நெகிழ்த்திய சிந்தையும்
மூளை மடிப்புகள் அதிகம் உள்ள
மேதவிலாச மண்டையும் வேண்டும்
வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும்
வங்கியில் இருப்பு
வீட்டில் கருப்பென
வழங்கி புழங்கிட
பணமும் வேண்டும்
வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும்
நேர்மையும் வேண்டும்
பக்தியும் வேண்டும்
எனக்கென சுதந்திரம் கேட்கும் வேளையில்
பகுத்தறிகின்ற புத்தியும் வேண்டும்
வேண்டும்
இப்படி கணவன் வர வேண்டும் என நான்
ஒன்பது நாட்கள் நோம்பு இருந்தேன்
வரம் தருவாள் என் வரலட்சுமி என
கடும் நோம்பு முடிந்ததும் தேடி போனேன்

தேடி எங்க போன அந்த பொண்ணு

beach-க்குதான்

ம்…
பொடி நடை போட்டே இடை மெலியவென
கடற்கரை தோறும் காலையும் மாலையும்
தொந்தி கணபதிகள் தெரிவது கண்டேன்

ஹா ஹா ஹா…

முற்றும் துறந்த மங்கையரோடு
அம்மண துறவிகல் கூடிடக் கண்டேன்

எங்க TV-லையோ

ஸ்
மூத்த அக்காள் கணவணுக்கு
முக்கால் தகுதிகள் இருந்தும் கூட
அக்காள் இல்லா வேளையிலே
அவன் சக்காளத்தி வேண்டும் என்றான்
எக்குலம் ஆனால் என்ன என்று
வேற்று மதம்வரை தேடி பார்த்தேன்
வர வர புருச லட்சணம் உள்ளவர்
திருமண சந்தையில் மிக மிக குறைவு
வரன் தர கேட்ட வரலட்சுமி உனக்கு
வீட்டுக்காரர் அமைந்தது எப்படி
நீ கேட்ட வரங்கள் எதுவரை பலித்தது
உறங்கிகொண்டே இருக்கும் உந்தன் அரங்கநாதன் ஆள் எப்படி
பிரபந்தம் சொல்லும் அத்தனை சேட்டையும்
வாஸ்த்தவமாக நடந்தது உண்டோ
இதுவும் ஒதுவும் அதுவும் செய்யும்
இனிய கணவர் யார்க்கும் உண்டோ
உனக்கேதும் அது அமைய பெற்றால்
உண்மையிலே அதிர்ஷ்டசாலிதான்
நீ அதுபோல் எனக்கும் அமையச் செய்யேன்
ச்ரி வரலட்ச்மி நமோஸ்த்துதே

=====
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s