உன்னாலே உன்னாலே – முதல் நாள் இன்று

Posted: July 28, 2010 in Uncategorized

படம் : உன்னாலே உன்னாலே
பாடல் : முதல் நாள் இன்று
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர்: பா.விஜய்
பாடியவர்கள் : கே கே, மஹாலட்சுமி ஐயர்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
முதல் நாள் இன்று
எதுவோ ஒன்று
வேராக உனை மாற்றவா
அங்கங்கு அனல் ஏற்றவா

என் உள்ளம் பாடுகின்றது
யார் சொல்லி கற்றுக் கொண்டது
நில் என்றால் சட்டென்று
நிற்காதம்மா
நான் என்ன சொன்னாலும்
கேக்காதம்மா
ஓ ஹோ..ஜானே ஜான்..

முதல் நாள் இன்று
எதுவோ ஒன்று
வேராக உனை மாற்றவா
அங்கங்கு அனல் ஏற்றவா

இசைதாகம் கூறுகின்ற உண்மை
குளிர் போலே காதல் மிக மென்மை
தீண்டுவைகள்
தித்திக்காதோ சொல் உள்ளம்

முழுதாக மூழ்கியதும் இல்லை
மூழ்காமல் மிதந்ததும் இல்லை
காதல் கடல்
விழுந்தவர் காணும் நிலை
ஓ..ஹு..வாஹோ..ஓ..ஹு..ஹோ..
வெகு தூரம் வந்தேன்
காதல் கிருமிகள் நெருங்காமல்

முதல் நாள் இன்று
எதுவோ ஒன்று
லேசாக எனை மாற்றலாம்
அங்கங்கு அனல் ஏற்றலாம்

இளம் நெஞ்சில் காதல் விதை தூவு
இல்லையேல் நீ தன்னந்தனி தீவு
வாழ்க்கை ஒரு
சுமையாகதோ சொல்லு

உதட்டாலே காதல் என்னும் சொல்லை
உரைத்தாலே கூட வரும் தொல்லை
வாழும் மட்டும்
விழிகளில் தூக்கம் கெடும்
ஆ…ஹ.ஹா..ஹ..ஒஓ..ஹோ..வாஹோ..
சுகமேது வாழ்வில்
காதல் வலியை சுமக்காமல்

முதல் நாள் இன்று
எதுவோ ஒன்று
வேராக உன்னை மாற்றலாம்
அங்கங்கு அனல் ஏற்றலாம்

உப்புக்கல் வைரம் என்று தான்
காட்டிடும் காதல் ஒன்று தான்
உண்டாகும் இன்பங்கள் உச்சம் உச்சம்
என்றாலும் துன்பம் தான் மிச்சம் மிச்சம்

=====

Leave a comment