ஏப்ரல் மாதத்தில் – ஏ நெஞ்சே

Posted: July 6, 2010 in யுவன் ஷங்கர் ராஜா

படம் : ஏப்ரல் மாதத்தில்
பாடல் : ஏ நெஞ்சே
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்: பா.விஜய்
பாடியவர்கள் : ஹரிஷ் ராகவேந்திரா, சதனா ஷர்கம்

படபட படவென அடிக்குது இதயம்
தடத்தட தடவென துடிக்குது இமைகள்
சலசல சலவென சூழலுது விழிகள்

அடுத்தது யாரோ? அடுத்தது யாரோ?
எடுப்பது யாரோ? எடுப்பது யாரோ?
எனதா உனதா எனவே எண்ணவே
தவிக்குது தவிக்குது தவிக்குது தவிக்குது …

ஏ நெஞ்சே என் நெஞ்சே
என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்

ஏ நெஞ்சே என் நெஞ்சே
என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்

ஹே ஹே ஹே காதல் ஒரு காந்தம்
எனை கண்டேன் நான்
ம்ம்-ம்ம்-ம்ம் ஈர்க்கும் அதன் திசையில்
என்று வீழ்ந்தேன் நான்

மாய கரம் ஒன்று மயில் இறகு கொண்டு
சில்லென்று மனதை தொடுதே

ஏ நெஞ்சே என் நெஞ்சே
என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்

என் நிலவில் மாற்றம்
எதிலும் தடுமாற்றம்
பார்வை பரிமாற்றம்
ஒரு ஆனந்த ஏக்கம்

கண்ணை விட்டு வெளியே
காணும் ஒரு கனவே
வரிந்து இழைத்தாலும்
இனி வாராது தூக்கம்

வெகு நேரம் பேசி பின்பு
விடை பெற்று போகும் நேரம்
நாலடிக்கும் நடக்கும் கால்கள்
நடை மறந்து திரும்பும் ஏனோ?

பேசாத நேரம்தானே
பெரிதாக தோணும் அன்பே
காலங்கள் தோற்கும் இங்கே …

ஏ நெஞ்சே என் நெஞ்சே
என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்

நேற்று வரும் கனவில்
நிலவு வரவில்லை
அடம்பிடிக்கும் நிலவை
இனி நான் என்று பார்ப்பேன்?

காதல் வரும்போது
கனவுகளும் மாறும்
நீ விரும்பும் நிலவை
இனி தினம்தோறும் பார்ப்பாய்

யார் யாரோ எழுதி சென்ற
புரியாத கவிதை எல்லாம்
நான் கேட்டு ரசித்தேன் இன்று

நான் பார்த்த மரமும் இலையும்
புது போர்வை பொர்த்திக்கொண்டு
புது பார்வை பார்த்துக்கொண்டு
நம்மை பார்த்து சிரிக்கின்றதே

ஏ நெஞ்சே என் நெஞ்சே
என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்

ஏ நெஞ்சே என் நெஞ்சே
என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்

ஹே ஹே ஹே காதல் ஒரு காந்தம்
எனை கண்டேன் நான்
ம்ம்-ம்ம்-ம்ம் ஈர்க்கும் அதன் திசையில்
என்று வீழ்ந்தேன் நான்

மாய கரம் ஒன்று மயில் இறகு கொண்டு
சில்லென்று மனதை தொடுதே

ஏ நெஞ்சே என் நெஞ்சே
என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்

=====
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s