படம்    : மனம் கொத்திப் பறவை
இசை    : டி. இமான்
பாடலாசிரியர்  : யுகபாரதி
பாடியவர்கள்  :  விஜய்பிரகாஷ், சின்மாயி
—-
என்ன சொல்ல ஏது சொல்ல  
நின்னுப் போச்சி பூமி இங்க
 
என்ன சொல்ல ஏது சொல்ல  
தத்தி தாவ தோனுதிங்க  

ஒத்த சொல்லில் யாருமே  
அழகாகவே உரு மாறுதே  
பொத்துக்கிட்ட வானமே  
புதிதாகவே மழை தூவுதே  
   
சக்கி… சக்கி சுகி சக்கி சக்கி சுகி… சாயில்லே 
சக்கி… சக்கி சுகி சக்கி சக்கி சுகி… சாயில்லே 
— 
இப்படியே இக்கணமே  
செத்திடவே சம்மதமே  
   
வந்தாயே உன்னோடு எதனாலே சொல்  
   
முன் ஜென்மமே செய்த முடிவே பதில்  
   
சொல்லும் முன்பு தரிசா கெடந்தேனே  
சொன்ன பின்பு வெளஞ்சேனே  
   
கம்பசக்க கரும்பா இனிச்சேனே  
கம்பி கல்லு மலர்ந்தேனே  
   
என்னை போனாலும் போகம சுத்தி சுத்தி  
உன்னை நாய் பேல சுத்துது என் புத்தி
—  
என்ன சொல்ல ஏது சொல்ல  
நின்னுப் போச்சி பூமி இங்க
 
என்ன சொல்ல ஏது சொல்ல  
தத்தி தாவ தோனுதிங்க    
   
சக்கி சக்கி சுகி… சக்கி சக்கி சுகி? சாயில்லே 
சக்கி சக்கி சுகி… சக்கி சக்கி சுகி? சாயில்லே 
—  
இச்ச இச்சு கண்ணத்திலே  
கிச்சு கிச்சு எண்ணத்திலே  
   
ஏதேதோ ஏக்கங்கள் எனை கொல்லுதே  
   
தூங்குன்னு சொன்னாலும் அடம் பண்ணுதே  
   
உன்னை பத்தி எனக்கு தெரியாதா  
சொக்க வச்சு எனை ஏய்ப்ப  
   
தண்ணிக்குள்ள மெதக்கும் வெறகாக  
எப்ப புள்ள கரை சேர்ப்ப  
   
உனை கண்ணாலம் செய்யும்   
போதே கட்டிக்கிட்டு  
புள்ள பெத்தேனே போகாத விட்டு   

என்ன சொல்ல ஏது சொல்ல
என்ன சொல்ல ஏது சொல்ல

ஒத்த சொல்லில் யாருமே  
அழகாகவே உரு மாறுதே  
பொத்துக்கிட்ட வானமே  
புதிதாகவே மழை தூவுதே  
   
சக்கி… சக்கி சுகி சக்கி சக்கி சுகி… சாயில்லே
சக்கி… சக்கி சுகி சக்கி சக்கி சுகி… சாயில்லே

படம்    : மனம் கொத்திப் பறவை
இசை    : டி. இமான்
பாடலாசிரியர்  : யுகபாரதி
பாடியவர்கள்  :  டி.இமான் 
—-
போ… போ… போ… நீ எங்கவேணா போ  
போ… போ… போ… நீ ஒன்னும் வேணா போ  

எனக்கு ஒன்னும் கவலை இல்ல  
போடி தங்கம் போ  
நீ யார வேணா ஜோடி சேரு  
சோகம் இல்ல போ… போ… போ…  

போ… போ… போ… நீ எங்கவேணா போ  
போ… போ… போ… நீ ஒன்னும் வேணா போ 

நூறு ஜென்ம ராணிய போல  
வாழ்வ போ பூ மானே  
என்னை போல எவனுமில்ல  
சொல்லப் போற நீ தானே  
பச்சைக்கிளி நீயே விட்டு பறந்தாயே  
சொல்லாம கொள்ளாம என்னோடு இல்லாம  
தள்ளாட விட்டுட்டியே
 
போ… போ… போ… நீ எங்கவேணா போ  
போ… போ… போ… நீ ஒன்னும் வேணா போ  

தங்கமே என்னிடம் என்ன குறை கூறு  
வத்தியே விட்டதே கண்ணுக்குள்ளே நீரு….

ஓய்ந்திடாமலே சிறு வயதில் ஊஞ்சலாடினோம்  
மாறிடாமலே நடு வயதில் நூறை கோடினோம்  
ஒரு நாள் கூட நீங்காமல் கேலி பேசினோம்  
நம்மை வேறாக பார்த்தோரை ஏனோ ஏசினோம்  
செல்வமே…

போ… போ… போ… நீ கூடுவிட்டு போ  
போ… போ… போ… நீ கூறும்கெட்டு போ 

ஓ… கல்லடிப்பட்டு நான்  
கண்டதில்லை காயம்  
சொல்லடி பட்டு நான்  
நிற்பதென்ன நியாயம் 
 
காதலோடு நீ இருந்திடவே காவலாகினேன்  
கானலாகி நீ பறந்திடவே சாக போகிறேன்  

உனை சேராமல் வாழ்ந்தாலே ஏது நிம்மதி  
எனை ஏற்காமல் போனாளே  
போடி உன் விதி உன் விதி 

எனக்கு ஒன்னும் கவலை இல்ல போடி தங்கம் போ   
   
நீ யார வேணா ஜோடி சேரு சோகம் இல்ல போ
 
போ… போ… போ… நீ தாலி கட்டி போ  
போ… போ… போ… நான் வாழா வெட்டி போ  

நூறு ஜென்ம ராணிய போல  
வாழ்வ போ பூ மானே  
என்னை போல எவனுமில்ல  
சொல்லப் போற நீ தானே  
பச்சைக்கிளி நீயே விட்டு பறந்தாயே  
சொல்லாம கொள்ளாம என்னோடு இல்லாம  
தள்ளாட விட்டுட்டியே
 
போ… போ… போ…  

 

படம்    : மனம் கொத்திப் பறவை
இசை    : டி. இமான்
பாடலாசிரியர்  : யுகபாரதி
பாடியவர்கள்  :  சந்தோஷ் ஹரிஹரன் 
—-
ஊரான ஊருக்குள்ள   
உன்னப்போல யாருமில்ல  
ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல  
கொஞ்ச நேரம் கூட  
ஒத்தாசையா வாழவே இல்ல  

கொஞ்ச நேரம் கூட  
ஒத்தாசையா வாழவே இல்ல

ஊரான ஊருக்குள்ள உன்னப்போல யாருமில்ல  
ஆனா நீ என்னை மட்டும் தீண்டவே இல்ல  
உன்ன உத்து பார்த்த  
கண்ணுரெண்டும் தூங்கவே இல்ல 
உன்ன உத்து பார்த்த  
கண்ணுரெண்டும் தூங்கவே இல்ல

காணாம காண வெச்ச  
கண்ணுக்குள்ள தீய வெச்ச  
ஆனா நீ என்னை மட்டும் பார்க்கவே இல்ல  
கொஞ்சி நாலு வார்த்த நல்லா பேசி கேட்கவே இல்ல
கொஞ்சி நாலு வார்த்த நல்லா பேசி கேட்கவே இல்ல
 
பேசாம பேச வெச்ச  
பிரியத்தோட கண்ணடிச்ச
பேசாம பேச வெச்ச  
பிரியத்தோட கண்ணடிச்ச 
ஆனா நீ என்னை மட்டும் பேசவே இல்ல  
மஞ்ச தாலி வாங்க  
கூட சேரும் ஆசையே இல்ல  
மஞ்ச தாலி வாங்க  
கூட சேரும் ஆசையே இல்ல
—-
ஊரான ஊருக்குள்ள   
உன்னப்போல யாருமில்ல  
ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல  
கொஞ்ச நேரம் கூட  
ஒத்தாசையா வாழவே இல்ல

ஊன ஊன ஊன ஊன 

கூவாம கூவ வச்ச  
கொண்டையிலே பூவ வெச்ச  
ஆனா நீ என்னை மட்டும் சூடவே இல்ல ?
அய்யோ  
தொலைஞ்சி போன ஆளை நீயும் தேடவே இல்ல 
அய்யோ  
தொலைஞ்சி போன ஆளை நீயும் தேடவே இல்ல
 
மூடாம மூடி வெச்ச  
முந்தானையில் சேதி வெச்ச  
மூடாம மூடி வெச்ச  
முந்தானையில் சேதி வெச்ச 
ஆனா நீ என்னை மட்டும் மூடவே இல்ல  
கள்ளி காதலோடு நானிருக்கேன் மாறவே இல்ல  
கள்ளி காதலோடு நானிருக்கேன் மாறவே இல்ல  

ஊரான ஊரான   ஊரான ஊருக்குள்ளே
   
ஊரான ஊருக்குள்ளே  
உன்னை போல யாருமில்ல  
ஆணா நீ என்னை மட்டும் சேரவே இல்ல  
   
தானாவே உன்னை வந்து சேருவா புள்ள  
   
கொஞ்சம் நேரம் கூட  
ஒத்தாசையா வாழவே இல்ல
கொஞ்சம் நேரம் கூட  
ஒத்தாசையா வாழவே இல்ல
 
ஊரான? ஊருக்குள்ள?
ஊரான ஊருக்குள்ளே  
உன்னை போல யாருமில்ல
ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல
 
உன்னை உத்து பாத்த கண்ணு ரெண்டும்  
தூங்கவே இல்ல  
உன்னை உத்து பாத்த கண்ணு ரெண்டும்  
தூங்கவே இல்ல 

கொஞ்சம் நோகா கண்ணை மூடி  
தூங்கு மாப்பிள்ளே 

படம்    : மனம் கொத்திப் பறவை
இசை    : டி. இமான்
பாடலாசிரியர்  : யுகபாரதி
பாடியவர்கள்  :  டி. இமான்
—-

ஜல்… ஜல்… ஜல் ஓசை  
நெஞ்சு நெஞ்சு நெஞ்சுக்குள்ள  
ஜல்… ஜல்… ஜல் ஓசை 
 
நில்… நில்… நில்… பேச  
கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சும் பிள்ள  
நில்… நில்… நில்… பேச
 
இருவிழி தந்தியடிக்குது என்ன நடக்குது தெரியலே  
இருதயம் கும்மியடிக்குது சொல்லி முடிக்கவும் முடியல  

ராவாகி போனாலே  
கண்ணுமுழி தூங்கலே  
பேசாம நீ போனா  
நெஞ்சுக் குழி தாங்கல  
உன்னால தன்னால சொக்குறேன்   சொக்குறேன் நான்  

ஜல்… ஜல்… ஜல் ஓசை  
நெஞ்சு நெஞ்சு நெஞ்சுக்குள்ள  
ஜல்… ஜல்… ஜல் ஓசை 
 
நில்… நில்… நில்… பேச  
கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சும் பிள்ள  
நில்… நில்… நில்… பேச

வானவில்லே தேவையில்லை  
நீயிருந்தா போதும் புள்ள  
சந்திரனும் நீயே சூரியனும் நீயே  
நந்தவனம் பூவெல்லாம் நீயே நீயே  
நட்சத்திர மீனெல்லாம் நீயே நீயே
  
எப்போதும் தீராத செல்வம் நீயே  
எங்கேயும் காணாத தெய்வம் நீயே
  
முன்னாடி பின்னாடி சொக்குறேன்   சொக்குறேன் நான்   

ஜல்… ஜல்… ஜல் ஓசை  
நெஞ்சு நெஞ்சு நெஞ்சுக்குள்ள  
ஜல்… ஜல்… ஜல் ஓசை 
 
நில்… நில்… நில்… பேச  
கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சும் பிள்ள  
நில்… நில்… நில்… பேச… பேச

நீ நடந்து போக கண்டா
பூமி பந்தே  நூறு துண்டா
சுத்திடுமே உன்னை  
வெச்சிடுமே கண்ணை 
 
வந்த வழி மாறாமா நீயும் போனா  
நிக்கிறனே ஆடாம கோயில் தூணா
  
எங்கே நீ நின்னாலும் எல்லைக்கோடு  
உன்னால பூ பூக்கும் பொட்டல் காடு
  
ஒட்டாரம் பண்ணாதே   
சொக்குறேன் சொக்குறேன் நான்?

ஜல்… ஜல்… ஜல் ஓசை

ஜல்… ஜல்… ஜல் ஓசை

இருவிழி தந்தியடிக்குது என்ன நடக்குது தெரியலே  
இருதயம் கும்மியடிக்குது சொல்லி முடிக்கவும் முடியல  

ராவாகி போனாலே  
கண்ணுமுழி தூங்கலே  
பேசாம நீ போனா  
நெஞ்சுக் குழி தாங்கல  
உன்னால தன்னால சொக்குறேன்   சொக்குறேன் நான்  
             

படம்    : கலகலப்பு
இசை    : விஜய் எபினேசர்
பாடலாசிரியர்  : பா. விஜய்
பாடியவர்கள்  : தேவன், பிரசாந்தினி
—-

உன்னைப்பற்றி உன்னிடமே   
எப்படி சொல்வேன் பெண்ணே

உன்னைப்பற்றி உன்னிடமே   
எப்படி சொல்வேன் பெண்ணே

உன் கண்ணைப்பற்றி சொல்லுவேனா  
இரு கன்னம் பற்றிச் சொல்வேனா  
உன் வெட்கம் பற்றிச் சொல்வேனா.. அன்பே

உன் கண்ணைப்பற்றி சொல்லுவேனா  
இரு கன்னம் பற்றிச் சொல்வேனா  
உன் வெட்கம் பற்றிச் சொல்வேனா.. அன்பே

உன்னைப்பற்றி உன்னிடமே   
எப்படி சொல்வேன் பெண்ணே

தக்கிடதா… தக்கிடதா
—-

தூரல் நனைக்க துளசி செடி போல்  
துவளும் கூந்தல் மனம் சொல்லட்டுமா  
   
சொல்லு நீ சொல்ல என் உள்ளே  
 மழைத்துளி போல் எண்ணங்கள்… ஆ…  
   
கோடி மலர்கள் வாசம் குவித்த  
கழுத்தின் வெள்ளைகளை சொல்லட்டுமா  

 உன் சுவாசங்களாய் உயர்ந்திருந்தும்  
 இளமையில் செய்வதை சொல்லட்டுமா… அன்பே


உன்னைப்பற்றி உன்னிடமே   
எப்படி சொல்வேன் பெண்ணே

 
மூங்கில் குடை போல் வளைந்து குறுகும்  
இடையின் லட்ஷனங்கள் சொல்லட்டுமா  
   
சொல்லு நீ சொல்லு என் நெஞ்சுக்குள்  
நிழல் போல நீ வந்தாய்… ஓ…  
   
உதடை கடித்து பேசும் அழகை  
இதழில் இதழ்வைத்து சொல்லட்டுமா  
அடி ஆப்பிள் மரம் அசைவது போல்  
அசையும் அளவுகள் சொல்லட்டுமா… அன்பே…  
   
ஓ… ஓ… ஓ…  
   
உன்னைப்பற்றி உன்னிடமே   
எப்படி சொல்வேன் பெண்ணே   

உன் கண்ணைப்பற்றி சொல்லுவேனா  
இரு கன்னம் பற்றிச் சொல்வேனா  
உன்வெட்கம் பற்றிச் சொல்வேனா… அன்பே

உன் கண்ணைப்பற்றி சொல்லுவேனா  
இரு கன்னம் பற்றிச் சொல்வேனா  
உன்வெட்கம் பற்றிச் சொல்வே…அன்பே

ம்… ம்… சொல்லு…… 

படம்    : கலகலப்பு
இசை    : விஜய் எபினேசர்
பாடலாசிரியர்  : பா. விஜய்
பாடியவர்கள்  : கார்த்திக்
—-
உன்னோட பேச உன்னோட பழக உன்னோட சிரிக்க ஆசை இல்ல
உன் பெயர கேட்க உன் கண்ண பார்க்க உன் மனச இழுக்க ஏங்கவில்ல
நான் பார்த்ததிலே உனை போல யாருமில்ல

அவ திரும்பி பார்த்து மெல்ல சிரிச்ச
என் மனசு கொஞ்சம் கொள்ளை அடிச்ச
அவ திரும்பி பார்த்து மெல்ல சிரிச்ச
என் மனசு கொஞ்சம் கொள்ளை அடிச்ச

எனக்கு என்ன ஆச்சு அட தெரியவில்ல
என் காலு தரைய தான் தொடவுமில்ல
எனக்கு என்ன ஆச்சு அட தெரியவில்ல
என் காலு தரைய தான் தொடவுமில்ல

என்ன பாத்துக்கிடே பாத்துக்கிடே நடக்குறா
ஆனா பாக்கமலே போவதுபோல் நடிக்கிறா
ஒரு பூனை குட்டி போலே என்ன மிரட்டுறா
ஐயோ என்னென்னவோ பண்ணுறா

அவ திரும்பி பார்த்து மெல்ல சிரிச்ச
என் மனசு கொஞ்சம் கொள்ளை அடிச்ச
உன்னோட பேச உன்னோட பழக உன்னோட சிரிக்க ஆசை இல்ல

முன்கோப மூச்சழகா? முத்து முத்து பேச்சழகா?
முல்லை சர பல்லழகா? ஒன்னும் புரியும்படி இல்ல..
எட்டாம் பிறை நிலவழகா? ஏறு நெத்தி முகமழகா?
ஏழு அடுக்கு உடல் அழகா எதும் வெலங்கலயே உள்ள..
என்ன பெத்த மகராசி.. பாத்து வெச்ச சிலை போல போல..
கண்ணு முன்னே வந்தாலே இனி செத்தாலும் இவ கூட தான்..

என்ன பாத்துக்கிடே பாத்துக்கிடே நடக்குறா
ஆனா பாக்கமலே போவதுபோல் நடிக்கிறா
ஒரு பூனை குட்டி போலே என்ன மிரட்டுறா
ஐயோ என்னென்னவோ பண்ணுறா

எப்பவுமே இவ முகத்த பாத்துகிட்டே இருக்கணும் போல்
நெஞ்சுவடம் தவிக்குதப்பா சுக அவஸ்தையுன்னு சொன்னேன்
கத்திரிகாய் நறுக்கையிலே அப்பளத்த பொறிக்கையில
வானலியில் வறுக்கயிலே இவ நெனப்பில் வெந்து நின்னே
கும்பகோணம் காவேரி உன் காதல் ரகசியமா என் காதல் சொல்லாதா
அட ஆத்தாடி ஏன் ஆளு நீ ஏன் ஆளு நீ

என்ன பாத்துக்கிடே பாத்துக்கிடே நடக்குறா
ஆனா பாக்கமலே போவதுபோல் நடிக்கிறா
ஒரு பூனை குட்டி போலே என்ன மிரட்டுறா
ஐயோ என்னென்னவோ பண்ணுறா

அவ திரும்பி பார்த்து மெல்ல சிரிச்ச
என் மனசு கொஞ்சம் கொள்ளை அடிச்ச
அவ திரும்பி திரும்பி பார்த்து மெல்ல சிரிச்ச
என் மனசு கொஞ்சம் கொள்ளை அடிச்ச

எனக்கு என்ன ஆச்சு அட தெரியவில்ல
என் காலு தரைய தான் தொடவுமில்ல
எனக்கு என்ன ஆச்சு அட தெரியவில்ல
என் காலு தரைய தான் தொடவுமில்ல

படம் : வழக்கு எண் 19/8
இசை : ஆர். பிரசன்னா
பாடலாசிரியர் : நா. முத்துக்குமார்
பாடியவர்கள் : தண்டபானி
—-

வானத்தையே எட்டிப் பிடிப்பேன் பூமியையும் சுற்றி வருவேன் 
வானத்தையே எட்டிப் பிடிப்பேன் பூமியையும் சுற்றி வருவேன்

உன் கண்ணுக்குழி அழகில் தான் 
என் கற்பனைய நான் வளர்த்தேன் 
உன் நெஞ்சுக்குழி மீது தான்டி
என் நிம்மதிய நான் புதைச்சேன்

அடி பெண்ணே நீயும் பெண் தானோ 
இல்ல பிரம்மன் செஞ்ச சிலை தானோ

அடி பெண்ணே நீயும் பெண் தானோ 
இல்ல பிரம்மன் செஞ்ச சிலை தானோ

வானத்தையே எட்டிப் பிடிப்பேன் பூமியையும் சுற்றி வருவேன்

மணலில் கட்டி வைத்த கோட்டை 
அதை மழை வந்து கரைத்தென்ன?
எனக்குள் கட்டி வைத்த கோட்டை 
அதை நீ வந்து உடைத்ததென்ன?

உள் நெஞ்சம் எனக்குள்ளே அய்யோ உன் பேரை சொல்கிறேதே
என்னை விட்டு உயிர் போகும் 
அந்த உயிர் வந்து உன்னைச் சேரும்
நான் உயிரோடு தான் வாழ்ந்தா 
பெண்ணே உனக்காக காத்திருப்பேன்

வானத்தையே எட்டிப் பிடிப்பேன் பூமியையும் சுற்றி வருவேன்

மெழுகு போல் உருகினேனே நீ தீயாக சுட்டதினால்
நீரினில் மூழ்கிக் கொண்டு நான் நீருக்கு அலைந்தேனே

கண் பார்த்த பார்வைகளை உன் உதடுகள் பொய் சொல்லலாம்
கானல் நீர் கண்டதை என் இதயத்தில் மறந்திடுமோ
புள்ளி வைத்து கோலம் போட்டால் நல்ல சித்திரம் ஆகிடுமா?

வானத்தையே எட்டிப் பிடிப்பேன் பூமியையும் சுற்றி வருவேன் 
வானத்தையே எட்டிப் பிடிப்பேன் பூமியையும் சுற்றி வருவேன்

படம் : வழக்கு எண் 18/9
இசை : ஆர். பிரசன்னா
பாடலாசிரியர் : நா. முத்துக்குமார்
பாடியவர்கள் : கார்த்திக்
—-
ஒருகுரல் கேட்குது பெண்ணே உயிர்விடும் முன்னே
உந்தன் காதில் கேட்டிடுமா கேட்டிடுமா
ஒரு அலை அடிக்குது பெண்ணே கரைதொடும் முன்னே
உந்தன் கைகள் தீண்டிடுமா தீண்டிடுமா

மன கதவு திறந்திடுமா மோதி நானும் பார்க்கிறேன்
பழகிடுமா விலகிடுமா கனவிலும் நினைவிலும்

ஒருகுரல் கேட்குது பெண்ணே உயிர்விடும் முன்னே
உந்தன் காதில் கேட்டிடுமா கேட்டிடுமா
ஒரு அலை அடிக்குது பெண்ணே கரைதொடும் முன்னே
உந்தன் கைகள் தீண்டிடுமா தீண்டிடுமா

முதல்முறை மழைமேகம் எந்தன் வாசல் மேலே
மனம் இன்று ஈரமாகி பாரமாகுதே
இதழ்வரை வரும்வார்தை உந்தன் பார்வையாலே
இடம்விட்டு தடம்மாறி தூரம் போகுதே

தனிமையில் தீயினை தீண்டி தீண்டி நானே
காயத்தோடு வாடும் நேரத்தில் விழிகளில் வரமென
எதிரில் நீயும் வந்தாய் வாழதோன்றுதே

உன் முகம் பார்க்கையில் கண்ணிலே தாய் முகம் வருவது ஏனடி
உன்னிடம் என்ன நான் வேண்டுகிறேன்

ஒருகுரல் கேட்குது பெண்ணே உயிர்விடும் முன்னே
உந்தன் காதில் கேட்டிடுமா கேட்டிடுமா

தோடாமலே தொட்டு பேசும் மூச்சுகாற்றின் வாசம்
விடாமலே என்னை இங்கு கூறுபோடுதே

படாமலே பட்டுபோகும் பட்டு போன்ற கேசம்
எழாமலே என்னை வீழ்த்தி வென்றுபோகுதே
உறவுகள் பிரிவேன வாழ்ந்து வந்தபோது
வானவில்லை காட்டிபோகிறாய் எரிமலை நடுவினில்
பனியை போலவந்து வீசிபோகிறாய்

உனக்கென தந்திட என்னிடம் உயர்ந்தது எதுவும் இல்லையே
உயிரையே தருகிறேன் கண்மனியே

ஒருகுரல் கேட்குது பெண்ணே உயிர்விடும் முன்னே
உந்தன் காதில் கேட்டிடுமா கேட்டிடுமா
ஒரு அலை அடிக்குது பெண்ணே கரைதொடும் முன்னே
உந்தன் கைகள் தீண்டிடுமா தீண்டிடுமா

படம் : லீலை
இசை : சதீஷ்
பாடலாசிரியர் : சதீஷ்
பாடியவர்கள் : சதீஷ்
—-
ஜில்லென்று ஒரு கலவரம் ஹே ஹே
நெஞ்சுக்குள் இந்த நிலவரம் ஹே ஹே
பெண்ணென்று ஒரு புயல் வரும் நேரம்
ஹே ஹே காதல் ஒரு புறம் கண்ணாலே காய்ச்சல் ஒரு புறம்
என்னில் மோதல் தரும் சுகம் ஆரம்பம்

தூரலின் சாரலில் நான் நின்றபோது
வானவில் ஒவியம் நான் கண்டதுண்டு
உன் கண்கள் தரும் வண்ணங்களில்
என்னுள் எழும் எண்ணங்களில்
நான் உறைந்து போனேன் இன்று

ஜில்லென்று ஒரு கலவரம் ஹே ஹே
நெஞ்சுக்குள் இந்த நிலவரம் ஹே ஹே
பெண்ணென்று ஒரு புயல் வரும் நேரம்
ஹே ஹே காதல் ஒரு புறம் கண்ணாலே காய்ச்சல் ஒரு புறம்
என்னில் மோதல் தரும் சுகம் ஆரம்பம்

சாலையில் ட்ராஃபிக்கில் நான் வாடும்போது
எஃப்ம்மில் பாடல்கள் தான் கேட்பதுண்டு
நான் உன்னைக் கண்டதும் என்னில் எழும்
புது பாடல்கள் ஓர் ஆயிரம்
என்னை மறந்து நின்றேன் இன்று

ஜில்லென்று ஒரு கலவரம் ஹே ஹே
நெஞ்சுக்குள் இந்த நிலவரம் ஹே ஹே
பெண்ணென்று ஒரு புயல் வரும் நேரம்
ஹே ஹே காதல் ஒரு புறம் கண்ணாலே காய்ச்சல் ஒரு புறம்
என்னில் மோதல் தரும் சுகம் ஆரம்பம்

உன்னை நான் பார்த்த நொடியிலே
என் கண்ணில் யுத்தம் எடுத்ததே
உயிர் மூச்சில் அமைதி பூத்ததே ஏன்?ஏன்?ஏன்?
என் கண்ணில் கோடி சூரியன் என் வானில் கோடை காற்முகில்
என் நெஞ்சில் வீசும் தென்றல் ஆனாய்

ஜில்லென்று ஒரு கலவரம் ஹே ஹே
நெஞ்சுக்குள் இந்த நிலவரம் ஹே ஹே
பெண்ணென்று ஒரு புயல் வரும் நேரம்
ஹே ஹே காதல் ஒரு புறம் கண்ணாலே காய்ச்சல் ஒரு புறம்
என்னில் மோதல் தரும் சுகம் ஆரம்பம்

ஜில்லென்று ஒரு கலவரம் ஹே ஹே
நெஞ்சுக்குள் இந்த நிலவரம் ஹே ஹே
பெண்ணென்று ஒரு புயல் வரும் நேரம்
ஹே ஹே காதல் ஒரு புறம் கண்ணாலே காய்ச்சல் ஒரு புறம்
என்னில் மோதல் தரும் சுகம் ஆரம்பம்

படம்: ஒரு கல் ஒரு கண்ணாடி
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர்: நா. முத்துக்குமார்
பாடியவர்கள்: மதுமிதா, முகேஷ்
—-
அழகே அழகே அழகின் அழகே நீயடி
உன் அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி..!!
ஐந்தே நிமிடம் ஐந்தே நிமிடம் தானடி
என் ஆசை நெஞ்சில் பற்றிக்கொண்டது தீயடி..!!
நான் என்ன என்னவோ கனவுகள் கண்டேன்
என்னை உன்னிடம் தந்திட வந்தேன்
வந்த வேகத்தில் தயக்கம் கொண்டேன்..!!
நீ தூண்டில் காரனை தின்றிடும் மீனா?
வேட்டையாளனை வென்றிடும் மானா
உன்னை நேசித்த காதலன் நானா?

வா கனியே.. முக்கனியே
தீயோடும் பனியே..!!
வாராமல் நீ சென்றால்
இவன் தனியே தனியே..!!
வா கனியே.. முக்கனியே
தீயோடும் பனியே..!!
உனக்காக உருண்டோடும் இவன்
காலம் இனியே..!!

அழகே அழகே அழகின் அழகே நீயடி
உன் அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி..!!
—-
சுடச்சுட நெருப்பென பார்த்தாய்..
குளிர்ந்திட மறுபடி பார்த்தாய்..
கண்கள் இரண்டும் காதல் சொல்லும்
இருந்தும் நடித்தாய்..!!
அடிக்கடி முள்ளென தைத்தாய்..
ஆயினும் பூவென பூப்பாய்..
இதயக் கதவை இரக்கம் கொண்டு
எனக்காய் திறப்பாய்..!!
இந்த காதல் என்பது மழலை போன்றது
அது சிணுங்க சிணுங்கத்தான் கவனம் பிறக்கும்..!!

உன்னை கெஞ்சி கேட்கிறேன்
என்னை கொஞ்ச கேட்கிறேன்
நீ கேட்க மறுக்கிறாய்.. தொடர்ந்து நடிக்கிறாய்..
உனக்கும் எனக்கும் நடுவில் காதல் வலம் வர..

—–
கனியே முக்கனியே தீயோடும் பனியே..!!
வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே..!!
வா கனியே முக்கனியே தீயோடும் பனியே..!!
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே..!

—–
பலப் பல கனவுகள் இருக்கு..
அதை ஏன் சொல்லணும் உனக்கு..?
மனசுவிட்டு பேச நீயும்.. நண்பனா எனக்கு..
பார்த்ததும் பிடித்தது உனக்கு..
பழகிட தோனணும் எனக்கு..
கானல் நீரில் மீனைத்தேடி அலைவது எதற்கு..?

நீ கோயில் தேரடி.. மரக்கிளையும் நானடி
என்னை கடந்து போகையில் நொறுங்குது நெஞ்சம்..

நீ காதல் கஜினியா? பகல் கனவில் பவனியா?
ஏன் துரத்தி வருகிறாய்.. நெருங்க நினைக்கிறாய்..
உனக்கும் எனக்கும் எதற்கு காதல் வலம் வர..

—-
கனியே முக்கனியே தீயோடும் பனியே..!!
வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே..!!
வா கனியே முக்கனியே தீயோடும் பனியே..!!
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே..!

அழகே அழகே அழகின் அழகே நீயடி
உன் அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி..!!
ஐந்தே நிமிடம் ஐந்தே நிமிடம் தானடி
என் ஆசை நெஞ்சில் பற்றிக்கொண்டது தீயடி..!!
நான் என்ன என்னவோ கனவுகள் கண்டேன்
என்னை உன்னிடம் தந்திட வந்தேன்
வந்த வேகத்தில் தயக்கம் கொண்டேன்..!!
நீ தூண்டில் காரனை தின்றிடும் மீனா?
வேட்டையாளனை வென்றிடும் மானா
உன்னை நேசித்த காதலன் நானா?

வா கனியே.. முக்கனியே
தீயோடும் பனியே..!!
வாராமல் நீ சென்றால்
இவன் தனியே தனியே..!!
வா கனியே.. முக்கனியே
தீயோடும் பனியே..!!
உனக்காக உருண்டோடும் இவன்
காலம் இனியே..!!

வா கனியே.. முக்கனியே
தீயோடும் பனியே..!!
வாராமல் நீ சென்றால்
இவன் தனியே தனியே..!!
வா கனியே.. முக்கனியே
தீயோடும் பனியே..!!
உனக்காக உருண்டோடும் இவன்
காலம் இனியே..!!